• Tue. Oct 8th, 2024

மக்கள் அதிகார அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Byவிஷா

Jul 19, 2023

மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகே, மக்கள் அதிகார அமைப்பினர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதனை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு குற்றவாளி எனவும் பற்றி எரியும் மணிப்பூர் பாஜக அரசே குற்றவாளிகள் எனவும் நேற்று குஜராத் இஸ்லாமியர்கள் படுகொலை, இன்று மணிப்பூர் பழங்குடியின மக்கள் மீதான படுகொலை எனவும் தொடரும் காவி பாசிசத்திற்கு முடிவு கட்டுவோம் எனவும் வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தியாறு அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட அனைத்து பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இவை அனைத்திற்கும் மத்திய பாஜக அரசே குற்றவாளி என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *