மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியவினர் ஆலயத்திலும், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திலும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகளும் அதைத் தொடர்ந்து, வடை மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆன்மிக மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.