

தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட நேரத்தில் பலரும் பின்பற்றி பட்டாசுகளை வெடித்தனர். என்றாலும் காற்று மாசால் டெல்லி சென்னை போன்ற பெருநகரங்கள் பாதிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து இடங்களிலும் வெடித்த பட்டாசுகளின் குப்பைகள் வீதிகள் முழுவதும் நிறைந்திருந்தது. இதனை சிவகங்கை நகர் துப்புரவு பணியாளர்கள் இன்முகத்துடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மும்மரக அகற்றி வருகின்றனர். அன்றாட பணிகளுக்கு இடையே கூடுதல் பணியாக பட்டாசு குப்பைகளை அகற்றுவதை இன்முகத்துடன் நகரை சுத்தமாக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை நாமும் பாராட்டுவோம்
