

ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கிடவும்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சட்டரீதியாக பெற்று தரப்பட்ட உரிமையை நிலை நாட்டிடவும்,முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்த கேரள அமைச்சர்களை கண்டித்தும் திமுக அரசை கண்டித்து விவசாயிகளின் வாழாதாரத்தை காத்திடவும் அதிமு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் ஓ_பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று கைலாசபட்டி பண்ணை இல்லத்தில் நடை பெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் SPM.சையதுகான் , மாவட்ட அவை தலைவர் ஜி. பொண்ணு பிள்ளை, மாவட்ட கழக துணை செயலாளர் ,முருக்கோடை இராமர், ஆர்.பார்த்தீபன் EX MP, முன்னாள் மாவட்ட செயலாளர் TT.சிவக்குமார், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் எம் செல்லமுத்து கழக பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,நகர/ஒன்றிய/பேரூர் கழக செயலாளர்கள்,கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.