தேர்தல் நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். எனினும், எந்த சூழ்நிலையிலும் தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. சிவகங்கையில் ஊரகத் வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேட்டி அளித்த்துள்ளார்
சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், டிசம்பரில் உள்ளாட்சி நகர்புற தேர்தல் நடத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும், மழையால் தேர்தல் தள்ளிபோக வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய போது இவ்வாறு கூறினார்.
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டாலும், கடந்த காலத்தைவிட சேதங்கள் மிகவும் குறைவே என்றும், இதுவே தமிழக அரசு எடுத்துள்ள சீரிய நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார். வரும் காலங்களில் இதனைப் போன்று வெள்ளத்தால் எந்தவித பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுப்பதற்காகவே முதலமைச்சர் தினமும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்ற அமைச்சர், எதனால் இந்த வெள்ளம் என்ற அடிப்படை ஆதாரத்தை கண்டறிந்து, முழுமையாக தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும், மத்திய குழு ஆய்வு செய்து சென்றபின் மீண்டும் மழை பெய்து கடுமையான வெள்ளம் வந்துள்ளது.
எனவே, அந்த பாதிப்புகள் குறித்தும், மத்திய குழுவிற்கு மாநில அரசு உரிய முறையில் தெரிவிக்கும் என்றும் தெரிவித்தார்.