• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கோலாகலமாக துவங்கியது செஸ்ஒலிம்பியாட் போட்டி

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான ஏற்பாடுகளையும் வியக்கும் வகையில் மேற்கொண்டுள்ளது.187 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்

இன்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் இந்திய பண்பாட்டை ,கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.சற்று முன் விழா மேடைக்கு வ ந்த ஸ்டாலின் ,அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த பட்டுவேட்டி,சட்டை பலரின் கவனத்தை ஈர்த்தது அதேபோல தமிழகத்தின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.முன்னதாக சதுரங்க கட்டம் போட்ட கரை வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார்.இதில் நடிகர் ரஜினிகாந்த்தனது மகளுடன் கலந்து கொண்டார். மேலும் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நாமெல்லாம் ஒன்று என்ற மையக்கருத்தை வைத்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது.8 பாரம்பரிய நடனங்களை நாட்டியக்கலைஞர்கள் நடனமாடி அசத்தினர் .சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாடல் இசைக்கப்படுகிறது.சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாடலுக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் இசைத்தார் லிடியன் நாதஸ்வரம்.கண்களைக் கட்டிக்கொண்டு ஹாரிபார்டர் தீம் மியூசிக் இசைத்தார் லிடியன் நாதஸ்வரம்.லிடியன் நாதஸ்வரம் இசைக்கும் பியானோ இசை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.மிஸ்டர் பீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் தீம் மியூசிக் இசைத்து ரசிக்க வைத்தார் லிடியன் நாதஸ்வரம் .செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் மணல் ஓவியம் வரைந்து அசத்தினார் சர்வம் படேல்.தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.