• Sun. Sep 24th, 2023

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..??? பள்ளி கல்வித்துறை ஆலோசனை

Byகாயத்ரி

Aug 12, 2022

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வி துறை திட்டமிட்டு வருவதாகவும் இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பள்ளி முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூட பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *