தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்கள் வரிசையில் அட்லீயும் ஒருவர். பிக் ஸ்டார்ஸை வைத்து படங்களை தமிழில் அள்ளி வீசிவிட்டு தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் தீபிகா படுகோன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் தளபதி விஜய் காமியோ ரோலிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தீடீரென்று பிரபலம் ஒருவர் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளாராம். அது யார் என்று கேட்டால் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். ரஜினியை பார்த்தவுடன் கட்டித்தழுவி வரவேர்த்துள்ளார் ஷாருக்கான். இதன்பின் சில மணிநேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளம் குஷியாகியுள்ளது.
