• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

என்னது இவங்க நிவேதா தாமஸ்-ஆ….. ரசிகர்கள் ஷாக்

Byகாயத்ரி

Sep 16, 2022

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின் பல படங்களில் பிரபல நடிகர்களான ரஜினி, விஜயுடன் நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதிலும் நடிப்பின் நாயகன் கமலுடன் நடித்த பாபநாசம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தமிழில் ஒரு சில படங்கள் நடிகையாக நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே ஒரு க்யூட் லுக்கிங் பெண்ணாகவே வலம் வருபவர் நிவேதா.. பல ரசிகர்களின் கனவுகன்னியாவும் இருந்தவர். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்துள்ள சாகினி தாகினி என்ற திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. அப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் தான் அண்மையில் நிவேதா கலந்து கொண்டிருந்தார். க்யூட் நடிகையென பெயர் பெற்ற நிவேதா தாமஸ் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அவர் போட்ட ரீல்ஸ் வீடியோவிலும் உடல் எடை கூடியதுபோல் இருந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம நிவேதா–வா இது என்று கேட்டுவருகின்றனர்.