• Fri. Apr 19th, 2024

இருளர் தம்பதியின் காலை கழுவி.. பாலாபிஷேகம் செய்த பஸ் கண்டக்டர்..எதுக்கு இந்த விளம்பரம்

பெரம்பலூரில் பஸ் ஏற வந்த, இருளர் இன தம்பதிக்கு, அரசு பஸ் கண்டக்டர் பாலாபிஷேகம் செய்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களை மனிதாபிமானமின்றி கீழே இறக்கிவிட்டு,அவர்களது உடமைகளை கீழே தூக்கி வீசியுள்ளனர்.

இந்த செயல் காட்டுத்தீ போல பரவ நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. “சமூக பின்புலத்தை காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணிக்க வந்த, வேறொரு இருளர் குடும்பத்தினரை, அந்த பஸ்ஸின் கண்டக்டர் பால் அபிஷேகம் செய்து வரவேற்றுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.பெரம்பூர் பஸ் ஸ்டாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இருளர் தம்பதியினர் 2 பேர் பஸ்ஸில் ஏறுவதற்காக அங்கே வந்துள்ளனர்..

242 -ம் நம்பர் பஸ்ஸில் ஏற சென்ற அவர்களை, டிரைவரும், கண்டக்டரும் தடுத்து நிறுத்தி உள்ளனர். டிரைவர் அப்துல்மன்னா மற்றும் கண்டக்டர் பெயர் பூமணி இருவரும் தம்பதியை பஸ் படிக்கட்டுக்கு அருகிலேயே நிற்கவைத்து, பால் அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கையில் ஒரு பால்பாக்கெட்டுடன் வந்த கண்டக்டர், அந்த இருளர் தம்பதியின் காலில் பாலை பீய்ச்சி அடிக்கிறார்.அருகிலேயே டிரைவர், கையில் ஆரத்தி, குங்குமம், மஞ்சள் தட்டுடன் நின்று கொண்டிருக்கிறார்.பாலாபிஷேகம் முடிந்த பிறகு, தம்பதிக்கு காலில் மஞ்சள், குங்குமம் தடவி விடுகிறார் கண்டக்டர்.பிறகு, தம்பதிக்கு ஆளுக்கொரு மாலையை எடுத்து அணிவிக்கிறார்.. இறுதியில், தட்டில் கற்பூரம் ஏற்றி அவர்களுக்கு சுற்றி போட்டு, பஸ்ஸில் ஏற சொல்கிறார்.

தாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், யாரையும் அவமானப்படுத்தவில்லை என்பதை விளக்குவதற்காகவே கண்டக்டரும், டிரைவரும் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதாகவே தெரிகிறது.அதேசமயம், இந்த வீடியோ சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.. ‘சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதற்காக ரொம்ப கேவலமான விஷயம் இது.இதுக்கு அந்த வடசேரி கண்டக்டர் செய்ததே பரவாயில்லை போல.. தேவையற்ற விளம்பரம் இது” என்ற கருத்துக்கள் இது சம்பந்தமாக எழுந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *