சமூக வலைத்தளங்களின் பயன்பாடு தற்போது பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் இவ்வுலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் நம் கண் பார்வைக்கு வந்துவிடும். அது ட்ரெண்டாகி வைரலானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
அதுபோல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவை ஐஆர்சி அதிகாரியான பகீரத் சௌத்ரியும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சிறுவன் ஆற்றின் நடுவே தத்தளித்தப்படி இருக்க அவனுக்கு அருகே முதலைகள் பல நெருங்கி வருகின்றன. பார்ப்பதற்கே குலை நடுங்க வைக்கும் அந்த காட்சியில் திடீரென படகில் வந்த சிலர் சிறுவனை தூக்கி துரிதமாக காப்பாற்றி செல்கின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பகீரத் சௌத்ரி இது சம்பல் நதியில் நடந்த சம்பவம் என்று கூறப்பட்டிருப்பதாகவும், ஆனால் இது எந்தளவு உண்மை என்று தெரியாவிட்டாலும் முதலைகளுக்கு நடுவே சிக்கிய சிறுவன் காப்பாற்றப்பட்டது சிறப்பான செயல் என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சிலர் அது சம்பல் நதியில் நடந்தது போல தெரியவில்லை என்றும், பழைய வீடியோவாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் சிறுவனை காப்பாற்றிய செயல் போற்றத்தக்கது என்றும் கூறியுள்ளனர்.