



மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈச்சநரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடப்பதாக பெருங்குடி போலீசார் தகவல் வந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த வாலிபர் விருதுநகரை சேர்ந்த 36 வயதான மலை அரசன் என்பதும் இவர் சிவகங்கை காளையார் கோவில் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.


இவரது மனைவி கடந்த ஒன்றாம் தேதி வாகன விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி குறித்த கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில்., மருத்துவமனை பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சிநெறி பகுதியில் அவரது உடல் பாதி எரிந்து நிலையில் கிடைக்கப்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரித்து வரும் நிலையில்.,
அவரது மனைவியுடன் சென்றபோது அவரை யாரோ கொலை செய்ய விபத்து ஏற்படுத்திருக்கலாம் என்றும் மேலும் அவரது உடல் கிடைக்கப்பெற்ற இடமும் உடல் எரிக்கப்பட்ட இடமும் வேறு வேறு இடம் என்பதால் உயிரிழந்த மலையரசனின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர் காவல்துறையினர் மோடி மறைப்பதற்காகவே இதுபோன்று கூறி வருவதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை தகுதி வழியாக சிம்மக்கல் செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

