• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

45 ஆண்டுகளுக்கு முன் மாட்டுவண்டியில் வந்து பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் செய்த பா.ஜ.க.

பெட்ரோல், டீசல் மற்றும் சமயல் எரிவாயு விலை தினந்தினம் புதிய உட்சத்தை அடைந்து வருகிறது. நாடு எங்கும் இதை எதிர்த்து பலவேறு போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. விலை உயர்வு காரணமாக பா.ஜனதா அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. பல மாதங்களாகவே விமர்சனங்களை எதிர்க்கொள்கிறது.

ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 45 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதே விவகாரத்தில் அப்போதைய இந்திரா காந்தியின் அரசை எதிர்த்தார். 1973-ம் ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டார். அப்போது பாராளுமன்றத்திற்கு அவர் மாட்டு வண்டியில் வந்தார். மற்ற உறுப்பினர்கள் சைக்கிளில் சென்றார்கள். அது அப்போதைய அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.