• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

‘அம்மா’ என்னும் ஆளுமையின் சாதனை..!

Byவிஷா

Feb 24, 2023

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
பிறக்கும் போது பெரிய புகழ் எதுவும் இல்லை, ஆனால் மறைந்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட ஆளுமை இருந்திருந்தால், என்று அனைவரையும் நினக்கும் அளவுக்கு தனது திறமையால் உயர்ந்தவர் ஜெயலலிதா. அவர் கொண்டு வந்த எண்ணற்ற மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள் காலமெல்லாம் அவர் நினைவைப் போற்றும்.
தனது ஆளுமையையும் திறமையையும் நிலைநிறுத்தி, இதுபோன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை என்று சொல்ல வைத்த பெருமையை, சரித்திரத்தில் பதியச் செய்த ‘புரட்சித் தலைவி’ செல்வி ஜெ.ஜெயலலிதா. மிகப் பெரிய ஆளுமைக்கு பிறகு சிறந்த தலைவர்கள் பொறுப்பேற்றிருந்தாலே, அவர்களின் திறமை விமர்சிக்கப்படும் என்ற நிலையில், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இன்றைய அதிமுக தினம் தினம் சந்தித்து வருகிறது. ஒரு ஆளுமை இல்லாவிட்டால் எந்த அளவிற்கு ஒரு கட்சியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதற்கு தற்போது அதிமுகவின் நிலைமையை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் தான், யாரும் ஒப்பிட முடியாத மாபெரும் ஆளுமை என்பதை மரணத்திற்கு பிறகும் நிரூபித்துக் கொண்டிருப்பது அவர் தனது வாழ்நாளில் செய்த மிகப் பெரிய சாதனை என்பதை செல்வி ஜெயலலிதாவை விமர்சிப்பவர்களும் ஒப்புக் கொள்ளும் விஷயம் என்பதே தமிழகத்தின் ‘அம்மா’ என்ற மாபெரும் ஆளுமையின் சாதனை.