• Thu. Apr 24th, 2025

நாளை முதல் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தொடக்கம்…

குமுளி ஊராட்சி, தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் மற்றும் மண்ணாரத்தரையில் கார்டன் ஆகியவை இணைந்து நடத்தும் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தேக்கடி- குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில், நாளை முதல் வரும் ஏப்ரல் 20 வரை 24 நாட்கள் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இக்கண்காட்சியில், வேளான் குறித்த கருத்தரங்கம், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், கண்காட்சி, இன்னிசைக்கச்சேரி, ஆடலும்பாடலும், வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சி போன்ற பொழுதுபேக்கு நிகழ்வுகளோடு இயற்கை உணவு, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, என நாள்தோறும் கருத்தரங்கும் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில்..,

காலை 9 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை நடைபெறும் கண்காட்சியில் 7 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும , மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமும், பெரியவர்களுக்கு கட்டணம் 70 ரூபாயாகவும், பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீம் கழிவு கட்டணமும் நிர்ணம் செய்யப்பட்டுள்ளது என்றார்.