• Sun. Apr 28th, 2024

மார்ச் 22ல் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்க திட்டம்

Byவிஷா

Feb 21, 2024

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் அருண்துமால் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தற்போது 17வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நடைபெற இந்த ஐபிஎல் தொடரை, தலா 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து, எதிர்வரும் சீசனை இவ்விரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி வென்று, அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2024 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை தொடங்க உள்ள தேதி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஐபிஎல் தலைவர் அருண் துமால் வரும் மார்ச் 22ம் தேதி ஐபிஎல் தொடரின் 17வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் ஐபிஎல்-லின் முதல் போட்டியை தொடங்குவோம் என நம்புகிறோம். இது தொடர்பாக, நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுடம் பேசிவருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு முதலில் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்படும். அதன்பிறகு, மீதமுள்ள முழு போட்டி அட்டவணையையும் வெளியிட்டு இந்தியாவில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
ஐபிஎல் 17வது சீசன் மே 26 வரை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 5ம் தேதி துவங்க உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 நாட்கள் ஓய்வு அளிக்க பிசிசிஐ முயற்சிக்கும். உலகக் கோப்பை இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியுடன் விளையாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *