

தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர செயலாளர் தளபதிகோபி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் முதல் முதலாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கும் மற்றும் இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கும் சர்பத், மோர், தர்பூசணி, முதலிய பொருட்களை பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சியோடு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் காளீஸ்வரர், மாவட்ட செயற்குழு தாமரை பாண்டி ,ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் ,மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் துணை செயலாளர் செல்வி செயற்குழு நல்ல மணி நகர இணை நகர இணை செயலாளர் கணேஷ் நகர பொருளாளர் நகர துணைச் செயலாளர் முத்துப்பாண்டி நகர செயற்கூலு பரத் சக்தி சுதர்சன் வைரம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


