தமிழகம் மட்டும் அல்ல தென்னக மாநிலங்களை சேர்ந்த கேரள, கர்னாடக, ஆந்திரா, தெலுங்கானா பகுதியை சேர்ந்த தமிழர்கள் எல்லாம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் குவிந்த எண்ணிக்கை இதுவரை தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில் இதுவரை கூடாதா இளைஞர்கள் கூட்டத்தை இன்று (அக்டோபர்-27)ம் அன்று தமிழகம் முதல், முதலாக பார்த்தது.
தமிழகத்தில் பெரும் பகுதி மழை எச்சரிக்கை இருந்த நிலையில். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்த பகுதியில் சூரியனின் வெளிச்சம் பரவலாக இருந்தது. விஜய், வெற்றி, விழுப்புரம், விக்கிரவாண்டி என்ற வார்த்தை எல்லாவற்றையும் “V ” என்ற முதல் எழுத்து சொல்லும் மந்திரம் சொல்லுக்குள் புதைந்திருக்கும் ஆங்கிலம் பதம் VICTORY.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை
இணைத்துக் கொண்டு 2026_சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றமாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்ற சூழ்உறை ஒரு காலத்தில்(1996_21) காங்கிரஸ், பாமக,கூட்டணி ஆதரவில் ஆட்சி நடத்திய திமுக கட்சியினர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது இனியும் சட்டமன்ற தேர்தலுக்கு எஞ்சிய நாட்களில் திமுகவின் அணுகுமுறை, அவர்களது கூட்டணி கட்சியிடம் ஒரு சாதகமான அணுகு முறைக்கு தள்ளியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு. தமிழக கட்சியான திமுக-வுக்கும், பாஜகவுக்கும், நாம் தமிழர் கட்சிகளை விஜய் நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
தமிழக அரசியல் சதுரங்கத்தின் திருப்பு முனையாக தமிழக வெற்றிக் கழகம் வழிகாட்டியாக, தமிழக அரசியல் களம் இன்று முதல் ஒரு புதிய பார்வையில் பயணிக்கும் திசை. விஜய் தலைமையில் பல கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கூட்டணி அரசு முதல்,முதலாக ஆட்சி கட்டிலில் அமருமா? என்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விக்கிரவாண்டி வானில் தோன்றியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள பதின்வயதினர். விஜய்யின் ஆதரவாளர்களாக இருப்பது. விஜய் வெற்றி கோட்டை தொட்டுவிடுவார் என்ற ஒரு பொது வார்த்தை பிரயோகம். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கேட்க செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சொல்லும் செய்தியாக பரவுகிறது.
