• Tue. Sep 17th, 2024

தக்ஸ்- விமர்சனம்

Byதன பாலன்

Feb 27, 2023

இந்திய திரையுலகில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டரான பிருந்தா கோபால் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான்
தக்ஸ்’ திரைப்படம் .

‘RRR’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, ‘மும்பைகார்’ என்ற இந்திப் படத்தையும் தயாரித்துள்ள இளம் தயாரிப்பாளரான ரியா சிபு, HR Pictures பேனரின் கீழ் இந்த ஆக்சன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த ‘தக்ஸ்’ திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ் காந்த், சரத் அப்பானி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய இளம் நடிகரான ஹிருது ஹாரூன் முதன்மை பாத்திரத்தில் இப்படம் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

‘RRR’ படத்தின் ப்ரோமோ படத் தொகுப்பின் மூலம் பிரபலமான படத் தொகுப்பாளரான பிரவீன் ஆண்டனி, இந்த ஆக்‌ஷன் படத்தை படத் தொகுப்பு செய்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தனது முதல் படத்தை காதல் படமாக இயக்கிய பிருந்தா மாஸ்டர், இம்முறை ஒரு ஆக்க்ஷன் படத்துடன் வந்து இருக்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளின் கதையாக இந்த தக்ஸ் படம் உருவாகியுள்ளது.

ஹிர்து ஹாரூன் தனது காதலிக்கு தொல்லை கொடுத்த ஒருவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். எப்படியாவது சிறையில் இருந்து தப்பித்துவிட்டு காதலியுடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது இவரின் திட்டம். இதற்கு சிறையில் இருக்கும் சக கைதிகளின் உதவியை நாடுகிறார்.

சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் உள்ளிட்ட கைதிகள் சிலர் இதற்கு சம்மதிக்கின்றனர். இறுதியில் எல்லோரும் சிறையில் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் இந்தத் ‘தக்ஸ்’ படத்தின் திரைக்கதை.

புதுமுகம் ஹிர்து ஹாரூன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயல்பாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். காதலியாக அனஸ்வரா நல்ல அறிமுகம். சிறை அதிகாரியாக ஆர்கே.சுரேஷ்
பாபி சிம்ஹா நாயகனின் திட்டத்துக்கு உடன்படும் நபராக நடித்துள்ளார். முனீஷ்காந்த் உள்ளிட்டவர்களின் நடிப்பு இயல்பாக உள்ளது. குறிப்பாக அந்த இரட்டையர்களின் நடிப்பும்கூட.

பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சண்டைக் காட்சிகள் இயல்பாக எடுக்கப்பட்டுள்ளன. சாம் சி.எஸ். இசையில் இரண்டு பாடல்கள் அருமை. பின்னணி இசையும் ஓ.கே.தான்.

படம் முழுக்க சிறைக்குள்ளேயே நடப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுகிறது. அத்தனை போலீஸ்காரர்கள் உள்ள சிறையில் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி தப்பித்தது எல்லாம் நம்பும்படியாக இல்லை. ஒருவருக்கு கூடவா தெரியாமல் போய்விடும். நம்பகத்தன்மையற்ற காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கவில்லை.
படத்தின் திரைக்கதையில் கடைசிவரை எந்தவித டிவிஸ்ட் இல்லாமல் செல்வதால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆனாலும் வித்தியாசமான இயக்கத்தினாலும், தொழில் நுட்ப சிறப்புகளினாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *