
திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன.

இந்த தலத்தில் பிரகாரங்களில் உள்ள மாடங்கள் பிரமிக்க வைக்கின்றன. சோழ மன்னர்களும், வரகுணபாண்டிய மன்னனும் இந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பிரகாரத்தையும் ரசித்து ரசித்து கட்டியிருப்பது தெரிகிறது.திருவிடைமருதூரில் தைப்பூச உற்சவம் மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆடிப்பூர உற்சவத்தின்போது ஆடிப்பூரத்தம்மன் மட்டும் தனித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தைப்பூச உற்சவத்தில் கோவிலில் உள்ள 5 தேர்களும் வலம் வரும். இத்தைப்பூசத் திருநாளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கராம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.சைப்பூசத்தின் விஷேமாக முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது.இத்திருநாளில் மீனாட்சி வலம் வந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.