
அமெரிக்க பள்ளி ஒன்றில் கண்முடித்தனமாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்15 பிஞ்சுகுழந்தைகள் உட்பட 18பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு சம்பவம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு என்பது சர்வசாதரணம்.யார்வேண்டுமானலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்ற இந்த கலாசாரம் என்பது நீண்டகாலமாக தொடரும் பிரச்சனையாக உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிஞ்சு குழந்தைகள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
