• Wed. Apr 24th, 2024

மகிந்த ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமா…???

Byகாயத்ரி

May 25, 2022

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ஆம் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினார். அதனால் அவர் சில நாட்கள் கப்பற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து, தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் அவர் நாடாளுமன்றுக்கு வந்தார். இதனிடையில் மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்தது வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாலத்தீவு பத்திரிகையில் வெளியானது என்று இலங்கை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. அதில், ராஜினமா செய்ததுடன், மகிந்த ராஜபக்சே முகமது நஷீதை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது இலங்கையில் சுமூக நிலை திரும்பும் வரை மாலத்தீவில் தானும் தன் குடும்பமும் தஞ்சமடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்து, சுற்றுலா துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். அதை நிராகரித்த முகமது நஷீத் மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு முகம்மது நஷீத் இலங்கைக்கு சென்றார். கடந்த சில நாட்களாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார். இந்த தகவலை மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் சொன்னதாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *