

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச்சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு ,காஷ்மீரில்ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீரமரணம் அடைந்தார். ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் லஷ்மணன் என்பது தெரியவந்துள்ளது. அவர் மதுரை புதுப்பட்டியை சேர்ந்தவர் , ராணுவத்தின் பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
