• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மே 3ஆம் தேதி வரை வடதமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

Byவிஷா

Apr 30, 2024

வட தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை 9டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் இன்றும், நாளையும் சமவெளிப் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், மே 2, 3-ம் தேதிகளில் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகரிக்கக்கூடும். மே 2, 3-ம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்துக்கு இன்று முதல் மே 3-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.