கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரானை கண்டறிய தேவையான தொழில்நுட்ப வசதிகள் 12 ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒமிக்ரான் பரவினால் அதற்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.இதற்கான டெக்-பாத் கிட் 3.5 லட்சத்திற்கு மேல் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். கூடுதலாக 85,000 கிட்டுகள் வாங்குவதற்கு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்பாடு செய்து வருகிறார்.
தென்னாப்பிரிக்காவில் பரவியுள்ள வைரஸ் வீரியம் குறைந்ததாக உள்ளதாக தகவல் வரும் நிலையில், ஜெனிவாவில் உள்ள WHO அதிகாரிகள் கூறுகையில், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது. ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸின் வீரியம் குறித்து சில நாட்களுக்கு பிறகே தெரிய வரும். தொண்டை வலி, உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன. WHO மற்றும் மத்திய அரசின் வல்லுனர்களின் கருத்தின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ராதாகிருஷ்னன் கூறியுள்ளார்.