• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சில தினங்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடமாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணும் நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.