• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் திறந்திருக்கலாம்; நாங்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதா?.. கொந்தளித்த இந்து முன்னணியினர்!

By

Sep 2, 2021 , ,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய் பரவல் காரணமாக, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது என்றும் ,ஊர்வலம் செல்லக் கூடாது என்றும் தடை விதித்திருந்தது.

இதனை கண்டித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் கோயில்கள் தோறும் சென்று வழிபட்டு ,கடவுளிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் .எஸ்பிஎம். செல்வம் தலைமையில் செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் ,இந்து அன்னையர் முன்னணி செயலாளர்கள் பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது டாஸ்மார்க் கடையை திறக்கலாம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக் கூடாதா? உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ,அன்னையர் முன்னணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.