• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.தனஜெயன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.நாராயணன், மாவட்ட பொருளாளர் இன்பஒலி,மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாக குழு எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.