• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்கு பின்பு செவிலியர் தேர்தல்..,

ByS.Ariyanayagam

Jul 28, 2026

திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்ற செவிலியர்களுக்கான பொதுநல சங்கத் தேர்தல் நடந்தது.
திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா, மாரியம்மாள், தமிழரசி, அழகர்ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

2017-க்கு பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 600 செவிலியர்கள் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.