• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், அன்று சூலூர் காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிந்தாமணி புதூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா மகன் முஸம்மில் (24) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், காவல்துறையினர் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.