• Thu. Apr 25th, 2024

தேனியில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக தேனி அல்லிநகரம் நகராட்சியை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சங்கிலி மற்றும்மாநில தலைவர் முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி – அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக மக்களுக்கு தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ,பொது சுகாதரக் கேடு ஏற்பட்டு நோய் பரவம் அபாயம் உள்ளதாகவும்.தமிழ்நாடு முழுவதும் பொது மக்களுக்கு மிகவும் பாதிக்கக்கூடிய மின்சார கட்டணத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும்.புதிய பேருந்து நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா போன்ற போதை சாராயம் , கஞ்சா , குட்கா அனைத்து பொருட்களை விற்பனை செய்து வருவதால் இளைஞர்கள் , முதியவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையாகி தங்களை சீரழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் , பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் வண்ணம் மது போதையில் பல இடங்களில் தூங்குகிறார்கள், அரை குறை ஆடையுடன் திரிகிறார்கள். பலர் இதன் காரணமாக திருட்டு , கொள்ளை போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும். தேனி – அல்லிநகரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம் புதியதாக கட்டப்பட்டு 2013 – ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து 10 ஆண்டுகள் ஆகியும் பேருந்து நிலையத்தில் இன்னும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது . பல இடங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து , பேருந்து நிலையத்திற்குள் உள்ள ரோடுகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது
என்று கட்டண பொது கழிப்பறைகள் மற்றும் இலவச கழிப்பறைகள் சுத்தமில்லாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *