• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்..,

ByVasanth Siddharthan

Mar 2, 2026

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தின் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

கட்சியில் இணைந்த உறுப்பினர்களை அதிமுக சால்வை வேட்டி அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் நத்தம் விசுவநாதன். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஜெ. பேரவை மாநில இணைச்செயலாளர் ஆர். வி.என்.கண்ணன் உள்ளிட்ட
அதிமுக மாவட்ட,நகர, ஒன்றிய நிர்வாகிகள்  என பலர் கலந்துகொண்டனர்.

இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதனுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.இவ்விழாவில் நத்தம் விஸ்வநாதன்  கேக் வெட்டி புதிதாக அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

https://we.tl/t-bj5DU8HNEp