• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமூக ஆர்வலர் பொன்னமராவதியை சேர்ந்த இரா.பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது “

Byமுகமதி

Jul 11, 2026

புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 50-முறை இரத்ததானம் வழங்கிய பொன்னமராவதி சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது” வழங்கி பாராட்டியது.

புதுகை அறம் லயன்ஸ் சங்கம்.புதுக்கோட்டை தாஜ் ஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324 2F 2026 – 2027 அறம் லயன்ஸ் சங்கத்தின் 2026-2027-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான இரா.பாஸ்கர் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் தானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பொன்னமராவதி பகுதியைச் சார்ந்த பிரசவம் ஆக உள்ள பெண் ஒருவருக்கு மணப்பாறையில் இரத்தம் தேவைப்பட்ட தகவலறிந்த பாஸ்கர் பொன்னமராவதியிலிருந்து மணப்பாறை சென்று 50-வது முறையாக இரத்ததானம் செய்திருந்தார். சமூக ஆர்வலர் பாஸ்கரின் உயிர் காக்கும் சேவையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தலைநகர் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் “குருதிக் கொடைவள்ளல் விருது – 2026” சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு மாவட்ட முதல் துணை ஆளுநர் PMJF. Dr.Lion T.ஸ்டாலின் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.

மேலும் இவ்விழாவில் 71 முறை இரத்த தானம் செய்த காவலர் யோகானந்தன்,50 முறை இரத்தம் வழங்கிய புரட்சிவிதைகள் அமைப்பு ஈஸ்வரன், 50 முறை இரத்தம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் இரத்த தான கழகம் சிவக்குமார், புதுக்கோட்டை ராஜ்குமார் ஆகியோருக்கு “குருதிக் கொடைவள்ளல் விருதினை” மாவட்ட முதல் துணை ஆளுநர் PMJF. Dr.Lion T.ஸ்டாலின் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் குருதி கொடை வள்ளல் விருது பெற்ற அனைவருக்கும் அறம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் பாண்டிவேல்,செயலாளர் லயன் செல்வக்குமார், பொருளாளர் ரமேஷ், சாசனத்தலைவர் லயன் அரவிந்த்,நிர்வாகிகள்,
லயன்ஸ் சங்கங்கள்,சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என பலர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.