நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத் துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் பயிர்க்கடன், காப்பீட்டு வசதி, உரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. போதிய மழையும் பெய்துவருவ தால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகு படியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சாகு படிப் பரப்பும், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் பெருமளவில் உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறப்பு, ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப் பட்டது உள்ளிட்ட காரணங்களே இந்த சாதனைக்குக் காரணம் என்று வேளாண் மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.