

தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான குற்ற விவரங்கள் தொடர் பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் நாடு முழு வதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம் அடைந்துள்ள னர் என்றும் அவற்றில் இரு சக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதி கம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இரு சக்கர சாலை விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் இறந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து மரணங்களில் 44.5 விழுக் காடாகும். இருசக்கர வாகன விபத்துகளால் நிகழ்ந்த உயிரிழப்புகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரத்து 259 பேர் இறந்துள்ளனர். 7,429 மரணங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் 2ஆவது இடத்தில் உள்ளது.
