• Thu. Apr 18th, 2024

தமிழகம் ‘அமைதி பூங்கா’ பட்டத்தை இழக்கிறது”- எடப்பாடி பழனிசாமி

Byமதி

Nov 25, 2021

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி இதைப்பற்றி கூறும்போது, ”தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை அரசு நிலைநாட்ட வேண்டும்” என்று கருத்திட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *