• Tue. May 30th, 2023

இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு சாதனை

ByA.Tamilselvan

Mar 31, 2023

தமிழ்நாடு இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாகதிகழ்கிறது.
ஒரு நாட்டின் தனித்துவமிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். இந்தக் குறியீரு பெறுவதன் மூலம் ஒரு பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது. இந்தக் குறியீடு பெறும் பொருட்களை வேறு இடங்களில் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அபராதமும் விதிக்கலாம். ஆகையால் ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதென்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 195 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் , தமிழகத்தில் 46 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *