சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் வேளாண்மையை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாநிலத்தின் 34% அரிசி உற்பத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடந்து வருகின்றது. வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று அவர் அதில் பேசியுள்ளார்.