மதுரை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள மூலக்குறிச்சி கண்மாய் பகுதியில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நிர்வாணமாக, உடல் முழுவதும் பீர் பாட்டிலால் குத்தப்பட்டதை போன்ற பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த சமயநல்லூர் காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றிபிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் இந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு: செக்கானூரணி அருகே டிரைவர் அஜித் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திங்கட்கிழமை: சோழவந்தான் பகுதியில் டிரைவர் சுந்தரராஜன் என்பவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வரிசையில், தற்போது சமயநல்லூர் பகுதியிலும் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது மதுரைபூறநகர் பகுதியில் பெரும் பரப்பபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் அரங்கேறியுள்ளதால், மதுரை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.




