ஆசிரியர்கள் பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என தமிழக அரசு உத்தரவு
ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வித் துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும். தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும்.அதன்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும். அந்த வகையில், ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.