

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலை நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 36மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும், நிர்வாக திறமையற்ற முதல்வர் ஆர்வமின்றி ,விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால் தமிழகமே கொலைக்களமாக மாறி இருப்பதாகவும் கூறியுள்ளார். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு ஈடுஇணையாக பேசப்பட்ட காலம் மாறி இன்று கையறு நிலையில் செய்வதறியாது இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
