• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் நியமனம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார்!

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சென்னையில் மட்டும் 14 வார்டுகள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது. சென்னை மாநகராட்சியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 20 வார்டு கேட்ட நிலையில், 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. எனவே, திமுக அளிக்கும் இடங்களை ஏற்றுக்கொள்வதா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.