• Sun. Sep 24th, 2023

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை..,

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் சிறப்பு நிகழ்ச்சியின் பொருட்டு பொதுமக்கள் மற்றும் ஏழை எளியவர்கள் நலத்தட்ட உதவிகள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..,

தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் தாலுகா அந்தஸ்து பெற்ற கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திடவும் குறிப்பாக தென்காசி கொல்லம் மெயின் ரோட்டில் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூடிய அறுவை சிகிச்சை வசதியை உடனே ஏற்படுத்தி தர வேண்டியும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரந்து விரிந்த நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் புதிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் கழிவுநீர் வாறு கால் ஓடை பகிர்மான குழாய் பதித்தல் வீட்டு மனைகளாக அங்கிகரிக்கப்பட்ட இடங்களுக்கு அப்ரூவல் பெற சதுர அடிக்கு கட்டணத்தை குறைத்தி டவும் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு தேவையான நிதி ஆதாரம் ஒதுக்கிடவும் திருநெல்வேலி செங்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சென்னை பெங்களூரு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் பயணிகள் பயன் பெற தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடைய நல்லூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் 33 வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தமிழ் இனத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றலும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் நமது தென்காசி மாவட்டத்திற்கு இன்னும் சில தினங்களில் வருகை தர உள்ளார். அது சமயம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளான அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும் குறிப்பாக இலவச வீட்டு மனை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் மற்றும் மருத்துவ உதவிகள் பெற தேவையானவர்கள் நாளை வெள்ளிக்கிழமை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும் வருவாய் வட்டாட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை வழங்கவும் . மேலும் கழக வார்டு செயலாளர்கள் மூலமாக என்னிடமோ அல்லது மாவட்ட கழக அலுவலகத்திலோ மனுக்களை வழங்கலாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மனுக்கள் அளிக்க முன் வரவும் நகர கழக செயலாளர் அப்பாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *