• Thu. Apr 25th, 2024

தமிழக முதல்வர் உடன் புளியங்குடி நகர மன்ற தலைவி விஜயா சௌந்தர பாண்டியன் சந்திப்பு !

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர் மன்ற தலைவராக இருப்பவர் விஜயா சௌந்தர பாண்டியன். இவர் புளியங்குடி நகராட்சி அந்தஸ்து பெற்ற நாளிலிருந்து முதன் முதலாக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட பெண் நகர் மன்ற தலைவர் ஆவார். தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி நகராட்சியில் இதுவரை அதிமுகவினரே நகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து வந்ததை முதன் முதலாக மாற்றி அமைத்து அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராக இருக்கும் விஜயா சௌந்தர பாண்டியன் கடந்த இருதினங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.., பட்டியல் இன பெண்ணான என்னை எனக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உரிய அங்கீகாரம் அளித்து மக்கள் பணியாற்ற நகர்மன்ற தலைவர் என்னும் மிகப் பெரிய பணியை செய்திட அனுமதித்த தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து கழக உடன்பிறப்புகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் புளியங்குடி நகராட்சி தற்போது மூன்றாம் நிலையில் இருந்து முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தி மாற்றிடவும் பொது மக்களின் அடிப்படை தேவைகளான சாலை குடிநீர் வாறுகால் கழிவு நீரோடை வசதி மற்றும் எரிவாயு தகனமேடை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து செயல்படும் அளவிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி முதல்வரிடம் முறையிட்டுள்ளேன். முதல்வரும் வரும் சில நாட்களில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் தமிழக முதல்வரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நகரில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டு மனை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகை மூன்று சக்கர வாகனம் மற்றும் விவசாயிகளுக்கான மான்ய திட்டங்கள் என பல்வேறு அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள். தகுதியான நபர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் மூலமாக தங்கள் பகுதியில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் தகுதியான நபர்கள் நலத்திட்ட உதவிகள் பெற நமது நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலத்திலும் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பங்கள் வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொது மக்களிடம் தமிழக முதல்வரின் வருகை குறித்து விழிப்புணர்வுடன் நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க உதவிட கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *