தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- 2022ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பித்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் அந்த துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் நன்கு பரீசிலித்து தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பித்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஆண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.இவ்வுதவித் தொகையினை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை இவ்வாரியங்களுக்கான பொது வைப்பு கணக்கில் ஒப்பளிக்கப்பட்டட நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.