அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாகவும் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதம்பரி’. இந்தப் படத்தில் அறிமுகமான நடிகை அகிலா நாராயணன்.
அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான இவர், தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்புடன் பாடகியாகவும் வலம் வந்த அகிலா, ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடைய விருப்பத்துக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரித்தனர். இதையடுத்து, கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.இதன் மூலம், அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் இவர், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ என்ற இசைப் பள்ளியையும் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.