• Tue. Apr 23rd, 2024

ஹீரோவும் அவரே! வில்லனும் அவரே! – அஜித் 61 அப்டேட்?

அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியானது! மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது!

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும், படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *