கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. துவக்கத்திலிருந்தே தொடர்ந்து சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது.
தற்பொழுது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. கமல்ஹாசனுக்கு நாயகியாக படத்தில் காஜல் அகர்வால் நடித்துவந்தார் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால், காஜல் அகர்வாலுக்குப் பதிலாக புதிய நடிகையை நடிக்க வைக்க சில நாட்களாகவே பேச்சுவார்த்தை நடந்துவந்தது.
அதன்படி, காஜல் அகர்வாலுக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு சமீபத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தமன்னாவுக்கு தெலுங்கில் சில படங்கள் கைவசம் இருக்கிறது. அந்தப் படங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்ததேதிகளை மாறுதல் செய்ய முடியாது இருந்தபோதிலும் இந்தியன் 2வில் நடிப்பதற்கான முயற்சியில் இருந்து தமன்னா பின்வாங்கவில்லை.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, இந்தியன் -2 படக்குழுவினருக்கு தொடர்ச்சியாக தொடர்புகொண்டுப் பேசிக் கொண்டிருக்கிறாராம் த்ரிஷாவின் தயார். எப்படியாவது, இந்தியன்- 2வில் த்ரிஷாவை நடிக்க வைத்துவிட வேண்டுமென்று மகளுக்காக அம்மா முயற்சித்து வருகிறாராம்அதனால், தமன்னாவா அல்லது த்ரிஷாவா என்பதில் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்? இந்தியன் -2வில் கமல்ஹாசனுக்கு நாயகியாகப் போவது யாரென்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.