• Wed. Apr 24th, 2024

தாஜ்மகால் எங்களுக்கு சொந்தமானது – பாஜக எம்.பி

ByA.Tamilselvan

May 12, 2022

உலகின் காதல் சின்னமாகவும், இந்தியாவின் புராதன சின்னமான தாஜ்மகால் நிறுவப்பட்டுள்ள நிலம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.
வரலாறு இப்படி இருக்க தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், தாஜ்மகால் அமைந்துள்ள நிலம் தங்கள் குடும்ப சொத்து என தெரிவித்துள்ளார் பாஜக எம்.பி தியா குமாரி தெரிவித்துள்ளார்.
அதற்காக தாஜ்மகாலை இடிக்கச்சொல்லமாட்டேன் எனவும் கூறியுள்ளார் அவர் , ஆனால் பாபர்மசூதியை போல தாஜ்மகாலையும் வருங்காலத்தில் இடித்து விடுவார்களோ என நினைக்கத்தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *