• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..,

த.வெ.க. நிர்வாகிகள் வருகின்ற தேர்தலில் கவனத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பரப்புரை செயலாளர் ப.நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் 3 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்
கிழக்கு மாவட்டம் சார்பாக வேடசந்தூரில் ஆத்துமேட்டில் நேற்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தர்மராஜ் தலைமையேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் வேடசந்தூர் வெங்கடேஷ், ஐயப்பன், வடமதுரை சந்தோஷ், குஜிலியம்பாறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்து பேசினார்கள். வேடசந்தூர் நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் ப.சம்பத் பங்கேற்று பேசிய போது கூறியதாவது; திமுகவினர் தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவார்கள் அதை தடுக்க த.வெ.க. நிர்வாகிகள் ஒவ்வொரு கிளைச் செயலாளர்களும் நமது வாக்கையும் நமது ஆதரவாளர் வாக்கையும் காலையிலேயே சென்று தங்களின் செலுத்த வேண்டும். நடிகர் சிவாஜி கணேசனின் ஓட்டையே கள்ள ஓட்டாக போட்டவர்கள் இருக்கிறார்கள் எனவே நீங்கள் கட்சி நிர்வாகிகள் கவனத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும்.

பிரதமர் மோடி ஆட்சியில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடால் சென்னையில் பல ஓட்டல்களில் கேட்கும் உணவுகள் கிடைக்கவில்லை. சென்னை ஆர்.கே.நகரில் பஜ்ஜி சாப்பிடலாம் என்று ஒரு ஓட்டலுக்குச் சென்றேன் அங்கே சென்று பஜ்ஜி கேட்டபோது பிரதமர் மோடி இருக்கும் வரை இனி பஜியே கிடைக்காது என்று கூறினார்கள். இந்த நிலையில் இருக்கிறது ஆனால் அவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் இன்ப சுற்றுலாவில் இருப்பதாக கேள்விப்பட்டேன். திமுகவிற்கு உழைத்து ரத்தம் சிந்தியவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்ற நிலையில் அதற்கு தலைமை ஏற்க உதயநிதி ஸ்டாலினார் தகுதியானவர்.

தலைவர் விஜய் கூறியது போல் ஒரு விரல் புரட்சி இந்த தேர்தலில் நடத்த வேண்டும் அதற்காக நிர்வாகிகள் உழைக்க வேண்டும். வெற்றி விழா பொதுக்கூட்டத்திலும் நான் பங்கேற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஜல்லிக்கட்டு ஜலில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.